மத்தியப் பிரதேசத்தில் அதிவேகமாக வந்த லாரி மோதியதில் பழங்குடியினர் 5 பேர் பலியாகினர்.
மத்தியப் பிரதேச மாநிலம், திண்டோரி மாவட்டத்தின் கடசராய் பகுதியில் குடும்ப விழாவில் கலந்துகொண்டு, பழங்குடியினர் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தங்கள் சொந்த கிராமமான பரஸ்வாவிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பழங்குடியினர் பயணித்த பிக்கப் வாகனத்தின் டயர் பஞ்சரானதைத் தொடர்ந்து, 5 முதல் 6 பேர் ஓட்டுநருக்கு உதவத் தொடங்கினர்.
அதே நேரத்தில், எதிர்திசையில் இருந்து அதிவேகமாக வந்த லாரி திடீரென பழங்குடியினர் மீது மோதியது. இந்த விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவரான உதய் பிரதாப் சிங் (20), திண்டோரி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் லாரியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விபத்து குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. திண்டோரி மாவட்ட ஆட்சியர் அஞ்சு பவன் படோரியாவின் கூறுகையில், “பலியான ஐந்து பேரின் குடும்பத்தினருக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் தலா ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசின் சம்பல் திட்டத்தின் கீழ் தலா ரூ.4 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Summary
Acting in the matter, the police have arrested the driver of the vehicle that killed the five tribal men, and further investigations are underway.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

டிரம்ப் மிரட்டலைத் தொடர்ந்து ஈரான் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்; 25 பேர் பலி!

ம.பி.யில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அச்சம்

நேபாளம்: பேருந்து கவிழ்ந்து 7 இந்தியர்கள் பலி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



