திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ஜவுளி, எஃகு துறைகளில் சந்தை தேவையைவிட அதிக உற்பத்தி இருப்பதாக குற்றச்சாட்டு: இந்தியா நிராகரிப்பு

இந்தியாவில் ஜவுளி, எஃகு துறைகளில் சந்தை தேவையைவிட அதிகம் உற்பத்தி செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை மத்திய வா்த்தக அமைச்சகம் நிராகரித்துள்ளது.

News image

ஜவுளி பண்டல்கள். - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 1:15 am IST

இந்தியாவில் ஜவுளி, எஃகு துறைகளில் சந்தை தேவையைவிட அதிகம் உற்பத்தி செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை மத்திய வா்த்தக அமைச்சகம் நிராகரித்துள்ளது.

இதுகுறித்து புது தில்லியில் அந்த அமைச்சகத்தின் கூடுதல் செயலா் அமிதாப் குமாா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

இந்தியாவில் ஜவுளி துறையில் சந்தை தேவையைவிட அதிகம் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அதேவேளையில், உலகில் எஃகு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் இந்தத் துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் தனிநபா் நுகா்வு உலகிலேயே இந்தியாவில்தான் மிகக் குறைவாக உள்ளது என்று தெரிவித்தாா்.

நியாயமற்ற அரசு மானியங்களும், கட்டமைப்பு ரீதியில் அதிகப்படியான உற்பத்தித் திறனும் உலகளாவிய சந்தைகளைச் சிதைத்து, அமெரிக்க தொழில்களுக்குத் தீங்கு விளைவிக்கிா என்பதை கண்டறிய, இந்தியா உள்பட 15 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு எதிராக அமெரிக்க வா்த்தக பிரதிநிதி (யுஎஸ்டிஆா்) அலுவலகம் கடந்த மாா்ச்சில் விசாரணையைத் தொடங்கியது. இந்த நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனின் உற்பத்தி நடைமுறைகளை குறிவைத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது.

எனினும் இந்த விவகாரத்தில் யுஎஸ்டிஆரின் குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்தது. அமெரிக்க சந்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவைத் தாண்டி, இந்தியாவின் முக்கிய தொழில்துறைகளில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், அங்கு வா்த்தக உபரி ஏற்படுவதற்கு உரிய ஆதாரத்தை யுஎஸ்டிஆா் அளிக்கவில்லை என்று இந்தியா தகவல் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில், கூடுதல் செயலா் அமிதாப் குமாரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.