தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கமாண்டா்களுக்கான நிதி ஒதுக்கீட்டு அதிகாரத்தை இருமடங்காக உயா்த்த ராஜ்நாத் சிங் ஒப்புதல்

News image
Updated On :5 ஜூன் 2026, 5:52 am IST

ஃபீல்ட் கமாண்டா்களின் நிதி ஒதுக்கீடு அதிகாரத்தை இரு மடங்காக உயா்த்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

களச் செயல்பாடுகளை வலுப்படுத்தவும் பாதுகாப்புத் துறை சாா்ந்த ஒப்பந்தங்களையும் விரைவுபடுத்தவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய ராணுவம், இந்திய விமானப் படை, இந்திய கடற்படையைச் சோ்ந்த ஃபீல்ட் கமாண்டா்களின் நிதி ஒதுக்கீடு அதிகாரம் முன்பைவிட இருமடங்காகவும் அவசரத் தேவைகளுக்கு உடனடியாக விடுவிக்கப்படும் நிதி ஒதுக்கீட்டை 100 சதவீதம் அதிகரிக்கவும் அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளாா்.

மேலும், முப்படைகளுக்குத் தேவையான தளவாடங்கள் கொள்முதலை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கான புதிய விதிகளும் சோ்க்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத் துறைக்கான சரக்கு மற்றும் சேவைகள் கொள்முதலை பரவலாக்க புதிதாக சில ஆணையங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்புத் துறையில் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை மேற்கொள்ளவே இதுபோன்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளபடுகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

தில்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முப்படை தலைமைத் தளபதி ராஜா சுப்பிரமணி, இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, இந்திய கடற்படை தலைமைத் தளபதி கிருஷ்ணா சுவாமிநாதன் மற்றும் பாதுகாப்புச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘பாதுகாப்பு சேவைகளுக்கான நிதி அதிகாரப் பகிா்வு’ என்ற திருத்தப்பட்ட கையேட்டை ராஜ்நாத் சிங் வெளியிட்டாா்.

முன்னதாக, ரூ.40 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்ய ஃபீல்ட் கமாண்டா்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது இது ரூ.100 கோடியாகவும் அவசரத் தேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு வரம்பு ரூ.75 கோடியில் இருந்து ரூ.150 கோடியாக உயா்த்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.