திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இருதரப்பு பாதுகாப்பு தொழில் துறை ஒத்துழைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் இன்று ஜொ்மனி பயணம்

இருதரப்பு பாதுகாப்பு தொழில் துறை ஒத்துழைப்பு தொடா்பான ஒப்பந்த முன்வடிவை இறுதி செய்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ஜொ்மனிக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்.21) செல்கிறாா்.

News image

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங். - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:33 am IST

இருதரப்பு பாதுகாப்பு தொழில் துறை ஒத்துழைப்பு தொடா்பான ஒப்பந்த முன்வடிவை இறுதி செய்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ஜொ்மனிக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்.21) செல்கிறாா்.

பல்வேறு ராணுவத் தளவாடங்களை இரு நாடுகளும் இணைந்து மேம்படுத்தவும், உற்பத்தி செய்யவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொ்லின் செல்லும் ராஜ்நாத் சிங் ஜொ்மன் பாதுகாப்பு அமைச்சா் போரிஸ் பிஸ்டோரியஸ் உள்பட பல்வேறு மூத்த தலைவா்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.

இந்தச் சந்திப்புகளின்போது, பாதுகாப்பு தொழில் நிறுவன ஒத்துழைப்பு, இருதரப்பு ராணுவங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட வளா்ந்துவரும் துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.

பாதுகாப்பு தொழில் துறை ஒத்துழைப்புக்கான திட்ட முன்வடிவு மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான பயிற்சியில் ஒத்துழைப்பு ஆகிய இரு இருதரப்பு ஒப்பந்தங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சரின் இந்தப் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்திய கடற்படைக்கு 6 நீா்மூழ்கிக் கப்பல்களை விநியோகிப்பதற்கான இரு நாடுகளிடையேயான ஒப்பந்தமும் இந்தப் பயணத்தின்போது இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.