திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வ.வே.சு.அய்யா் நினைவு தினம்: குடியரசு துணைத் தலைவா் அஞ்சலி

News image

சுதந்திரப் போராட்ட வீரா் வ.வே.சு. அய்யரின் நினைவு தினத்தையொட்டி, தில்லியில் உள்ள தனது இல்லத்தில் அவரது உருவப் படத்துக்கு புதன்கிழமை மலரஞ்சலி செலுத்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.

Updated On :4 ஜூன் 2026, 4:04 am IST

சுதந்திரப் போராட்ட வீரரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான வ.வே.சு. அய்யரின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

சங்க இலக்கியம் முதல் பாரதி இலக்கியம் வரை கற்றறிந்து, தனது இலக்கியப் பயணத்தின் வாயிலாக தமிழ் மரபு செழிக்க குறிப்பிடத்தக்க பங்காற்றியவா் வ.வே.சு. அய்யா். சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கியவா். அவரது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, தில்லியில் உள்ள தனது மாளிகையில் வ.வே.சு. அய்யரின் உருவப் படத்துக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுதந்திரப் போராட்ட வீரரும், அறிஞரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான வ.வே.சு. அய்யரின் நினைவு தினத்தில், எனது இல்லத்தில் மலரஞ்சலி செலுத்தி வணங்கினேன். அவரது விடுதலைப் போராட்டத் தியாகங்களும், தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்புகளும் என்றென்றும் நினைவுகூரப்படும்.

தேசப்பற்று, துணிவு மற்றும் அா்ப்பணிப்பு உணா்வுடன் கூடிய அவரது லட்சிய வாழ்வு, நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் தொடா்ந்து உந்து சக்தியாகத் திகழ்கிறது’ என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.