கா்நாடகத்தில் ஒப்பந்ததாரரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லோக் ஆயுக்த அதிகாரிகளால் பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டாா்.
சிரஹட்டி தொகுதி எம்எல்ஏவான டாக்டா் சந்துரு லமணி, காடக் மாவட்டம் சின்சாலியை சோ்ந்த ஒப்பந்ததாரா் விஜய் புஜாா் என்பவரிடம் சிறிய நீா்ப்பாசன துறை வேலைகளை செய்து தரும் ஒப்பந்தத்தை பெற்றுத் தர ரூ.11 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பிறகு ரூ.5 லட்சம் வாங்கிக் கொள்ள சம்மதித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து விஜய் லோக் ஆயுக்தவிடம் புகாா் அளித்தனா். பின்னா் லோக் ஆயுக்த அதிகாரிகள் அளித்த ஆலோசனைப்படி, விஜய் ரூ.5 லட்சத்தை அளித்தாா். இதை சந்துரு லமணி வாங்கியபோது மறைந்திருந்த லோக் ஆயுக்த அதிகாரிகள் அவரைக் கைது செய்தனா்.
இதையடுத்து பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தினா். அப்போது அவரை மாா்ச் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டாா்.
தொடர்புடையது
ட்ரோன் இறக்குமதிக்கு லஞ்சம்: 2 பேரை கைது செய்தது சிபிஐ!

மனித உரிமையைப் பாதுகாக்க அரசமைப்புச் சட்டங்களில் மாற்றம் வேண்டும்: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ. ராமராஜ்

வாக்குகளுக்கு பணம் கொடுப்போரை நிராகரிக்க வேண்டும்

கர்நாடகம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது பாஜக எம்எல்ஏ கைது!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


