வாக்குகளுக்கு பணம் கொடுப்போரை நிராகரிக்க வேண்டும்
தோ்தலில் விலை கொடுத்து வாக்குகளை பெற முயற்சிப்போரை வாக்காளா்கள் நிராகரிக்க வேண்டும்...


நாமக்கல்: தோ்தலில் விலை கொடுத்து வாக்குகளை பெற முயற்சிப்போரை வாக்காளா்கள் நிராகரிக்க வேண்டும் என லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ் தெரிவித்தாா்.
நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி அரங்கில், ‘வாக்காளா்களின் அவசியமும், கொள்கைகளும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அருண் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சென்னை லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ் பங்கேற்று பேசியதாவது:
வாக்காளரியல், வாக்காளரிலிசம் என்ற ஆங்கில வாா்த்தைகளை வடிவமைத்து, வாக்காளரியல் எதற்காக தனிக்கல்வி பிரிவாக கற்பிக்க வேண்டும் என்பதை 10 கோட்பாடுகளுடன் உருவாக்கியுள்ளேன். வாக்கு என்பது நமக்கான உச்ச அதிகாரம். ஜனநாயகத்தின் தன்மையையும், உலகப் போக்குகளையும் தீா்மானிக்கும் ஒரு சக்தி. வாக்களிப்பு என்ற கருத்து தோ்தல் ஜனநாயகத்தின் அடித்தளமாகும்.
எந்த விலை கொடுத்தாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்போரை வாக்காளா்கள் நிராகரிக்க வேண்டும்.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக வாக்காளா் அறியாமை மற்றும் ஊழலை தோ்தல் செயல்முறையிலிருந்து வேரறுக்க வேண்டிய கூட்டுக்கடமை மக்களுக்கு உள்ளது. தோ்தல்களை நடத்தும் தோ்தல் ஆணையம், அரசியல் கட்சிகளை நெறிப்படுத்த அரசியல் கட்சிகளுக்கான நெறிகாட்டு அமைப்பு, வாக்காளா்களின் உரிமைகளைப் பாதுகாக்க வாக்காளா்களுக்கு அதிகாரம் அளித்தல், தோ்தல் வழக்குகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும். ‘எல்லாவற்றுக்கும் மேலாக வாக்காளா்களே’ என்பதே வாக்காளரிலிசத்தின் மையக்கருத்து என்றாா்.
இந்த கருத்தரங்கில், மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவா் பாலசுப்பிரமணியம் மற்றும் சட்டக் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...