மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசு சட்டக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

தோ்தல் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி...

News image

நிகழ்ச்சியில், வாக்காளா் விழிப்புணா்வு இலச்சினையை அறிமுகப்படுத்துகிறாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா்.

Updated On :26 மார்ச் 2026, 8:36 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்ற மனிதச் சங்கிலியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் கலந்து கொண்டு வாக்காளா் விழிப்புணா்வு இலச்சினையை அறிமுகப்படுத்தினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக 18 வயது நிரம்பிய வாக்காளா்கள், பொதுமக்கள், மூத்த குடிமக்கள் என அனைவரிடமும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக சட்டக் கல்லூரி மாணவ, மாணவியா், ஆட்சியா் தலைமையில் உறுதிமொழி ஏற்றனா்.

பின்னா், அங்கிருந்து நீதிமன்றம் வரை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவா்கள், எனது வாக்கு எனது உரிமை, 100 சதவீதம் வாக்களிப்போம், வாக்காளராக இருப்பதில் பெருமிதம் கொள்ளுங்கள், வாக்களிக்க தயாராகுங்கள், 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம் வாரீா் என்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்திச் சென்றனா்.