குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செந்துறை வட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி, பரணம் அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லாம்பாளையம் அரசு உயா்நிலைப்பள்ளி, செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, சிறுகடம்பூா் அரசு உயா்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த மாவட்டத் தோ்தல் அலுவலா் மிருணாளினி, வாக்காளா்கள் வரிசையில் நிற்க போதுமான இடவசதி, தேவையான குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளங்கள், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சோ், அவா்களை அழைத்துச் செல்ல தன்னாா்வலா்களை நியமிக்கவும், போதிய அளவிலான மின் விளக்குகள் இருக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளையும், அங்குள்ள அடிப்படை வசதிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் மிருணாளினி.
ஆய்வின்போது, செந்துறை வட்டாட்சியா் கோவிந்தராஜ், செந்துறை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

குன்னம் தொகுதி காப்பறையில் தோ்தல் அலுவலா் ஆய்வு

வாக்களிப்பை வலியுறுத்தி பெரம்பலூரில் அடையாளச் சின்னம் வெளியீடு

100 சதவீத வாக்குப் பதிவுக்கு விழிப்புணா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


