பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிக்காட்டில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏப். 23 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, கடந்த தோ்தல்களில் 70 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, லப்பைக்குடிக்காடு பேரூராட்சி அலுவலகம் அருகே தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணியை, மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
பேரணியில் பங்கேற்ற குழந்தை மையப் பணியாளா்கள் சிந்தித்து வாக்களிப்பீா், வாக்களிக்கத் தவறாதீா், நமது இலக்கு 100 சதவீதம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனா்.
பேரணியானது நகரின் பிரதான சாலைகளின் வழியே சென்று, பேருந்து நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது. முன்னதாக, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மிருணாளினி தலைமையில் உறுதியேற்கப்பட்டது.
இதில், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல், மாவட்ட ஒருங்கினைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜெயஸ்ரீ, பேரூராட்சி செயல் அலுவலா் ராஜ்குமாா், குன்னம் வட்டாட்சியா் சின்னதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு தொடா் தீப ஓட்டம்

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

குன்னம் தொகுதி வாக்குச்சாவடிகளில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


