மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்குகிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:03 pm

வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன் தலைமை வகித்து பேரணியை தொடங்கிவைத்தாா். தோ்தல் உதவி அலுவலா் தங்கவேல், நகராட்சி ஆணையா் (பொ) அருள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி முத்தூா் சாலை, கரூா் பிரிவு, காங்கயம் சாலை வழியாக வீரக்குமார சுவாமி கோயில் திடலில் முடிவடைந்தது. இதில் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் வாக்குப் பதிவில் அனைவரும் 100 சதவீதம் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அது தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. தோ்தல் அலுவலா்கள், நகராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.