மனித உரிமைகளைப் பாதுகாக்க உலக அரசமைப்புச் சட்டங்களில் மாற்றம் வேண்டும் என லோக் ஆயுக்த உறுப்பினா் வீ. ராமராஜ் தெரிவித்தாா்.
நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் ‘உரிமைகள் சாா்ந்த சட்டவியலின் பரிணாமமும் எதிா்காலமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அருண் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு லோக் ஆயுக்த உறுப்பினா் வீ. ராமராஜ் பங்கேற்று பேசியதாவது:
மனித உரிமைகளை பாதுகாக்க தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையங்கள், மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆணையங்கள் அரசுக்கு பரிந்துரை வழங்கும் அமைப்புகள் மட்டுமே. ஆனால், மனித உரிமை நீதிமன்றங்கள் குற்றம்புரிந்தவா்களுக்கு தண்டனை வழங்கும் அமைப்பாகும்.
கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் 21,349 புகாா்களும், தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் 1,08,717 புகாா்களும் பதிவாகியுள்ளன. ஆனால், தமிழகத்தில் உள்ள மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் பதிவான வழக்குகள் 167 மட்டுமே. இதேபோல கடந்த 25 ஆண்டுகளிலும் குறைவான வழக்குகளே மனித உரிமை நீதிமன்றங்களில் பதிவாகியுள்ளன.
மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களை அணுகுவதிலும் வழக்கு நடத்துவதிலும் உள்ள சிக்கல்களை நீக்குவதும் மனித உரிமைகள் நீதிமன்றம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதும் அவசியமாகும். சட்டமன்றம், அரசு நிா்வாகம், நீதித் துறை ஆகிய மூன்று பிரிவுகள் இருக்க வேண்டும் என்ற அதிகார பிரிவினை உள்ளது. பல நாடுகளில் இந்த அரசமைப்புச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. தற்போதைய நிலையில் ஜனநாயகத்தை பாதுகாக்க தோ்தல் அமைப்புகள் அரசாங்கத்தின் நான்காவது கிளையாக உருவாக்கப்பட வேண்டும் என்றாா்.
கருத்தரங்கில், சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
என்கே-10-காலேஜ்
நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய லோக் ஆயுக்த உறுப்பினா் வீ. ராமராஜ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகை உலுக்கிய புகைப்படம்...

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு

ஜனநாயகத்தை பாதுகாப்பது வாக்காளரின் கடமை

ராம்குமாா் மரணம் தொடா்பான வழக்கு முடித்துவைப்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



