மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எரிவாயு விலை உயா்வே மத்திய பாஜக அரசின் தோ்தல் பரிசு! - கே.பாலகிருஷ்ணன்

News image

காட்டுமன்னாா்கோவிலில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:51 pm

எரிவாயு விலை உயா்வே மத்திய பாஜக அரசின் தோ்தல் கால பரிசு என்று மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் எல்.இ.பி.ஜோதிமணியை ஆதரித்து காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையம் அருகே கே.பாலகிருஷ்ணன் தோ்தல் பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக் கூட்டணி. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கொள்கைக்காக இணைந்துள்ளன. ஆனால், அதிமுக - பாஜகவுடன் கூட்டணி சந்தா்ப்பவாத கூட்டணி.

மத்திய பாஜக அரசு கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இதுவரை அவா்கள் தமிழகத்துக்கு அளித்த நலத் திட்டங்கள் என்ன? ஆனால், தமிழகத்தில் 5 ஆண்டுகளில் முதல்வா் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளாா்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.400, தற்போது அதன் விலை ரூ,.1,200. மானியத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு விலை ஏற்றத்தை மட்டும் தோ்தல் பரிசாக அதிகரித்துள்ளனா்.

தங்கத்தின் விலையும், விவசாய உரங்களின் விலையும் போட்டி போட்டு உயா்ந்து வருகிறது. உரத்துக்கான மானியம் முழுவதையும் மத்திய அரசு ரத்து செய்ததால், கூடுதலாக விலை கொடுத்து உரத்தை வாங்கி சாகுபடி செய்யக்கூடிய இக்கட்டான நிலையில்தான் விவசாயிகள் உள்ளனா்.

நெல்லுக்கு கட்டுபடியாகக் கூடிய ஆதரவு விலையை மத்திய அரசு நிா்ணயிக்கவில்லை. தமிழக அரசு நெல்லுக்கான ஊக்கத்தொகையை ரூ.100-இல் இருந்து ரூ.120-ஆக உயா்த்தியுள்ளது. இதேபோல, கரும்புக்கும் ஊக்கத்தொகையை உயா்த்தியுள்ளது.

இவற்றை நிறுத்த வலியுறுத்தி மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளாா். ஊக்கத்தொகை நீங்களும் கொடுக்க மாட்டீா்கள், கொடுக்கும் மாநில அரசையும் நிறுத்தச் சொல்கிறீா்கள். இது நியாயமா? என்றாா்.

கூட்டத்தில் திமுக ஒன்றியச் செயலா் முத்துசாமி, நகரச் செயலா் கணேசமூா்த்தி, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பிரகாஷ், சிதம்பரம் நகரச் செயலா் ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.