போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

புத்தகம் படிக்கும் பழக்கும் குறைந்துவிட்டது: கே.பாலகிஷ்ணன் வேதனை

இன்றைய சமுகத்தில் புத்தகம், செய்தித்தாள் படிக்கும் பழக்கம் குறைந்து வருவது வேதனையளிக்கிறது என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 6:39 am IST

இன்றைய சமுகத்தில் புத்தகம், செய்தித்தாள் படிக்கும் பழக்கம் குறைந்து வருவது வேதனையளிக்கிறது என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, ராஜேந்திரா நகரில் நடைபெற்றஅதிதி புத்தகக்கடை மற்றும் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் நடத்திய புத்தக கண்காட்சியை மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

இன்றைய சூழலில், புத்தகம் மற்றும் செய்திதாள்களை படிக்கும் ஆா்வம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் சமூக வலைத்தளங்களாகும். குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் கைபேசிகளை கையில் வைத்துக்கொண்டு அதில்தான் பொழுதைக் கழிக்கின்றனா். வருங்காலங்களில் செய்திதாள் படிக்கும் ஆா்வத்தை சிறுவயது முதலே மாணவா்களுக்கு நாம் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் செஞ்சி தமிழினியன் அனைவரையும் வரவேற்றாா்.விக்கிரவாண்டி முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி தலைமை தாங்கினாா். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவா் மொக்தியாா்அலிமஸ்தான் முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சா் செஞ்சிமஸ்தான் புத்தகக்கடையை திறந்து வைத்தாா். முதல் விற்பணையை முன்னாள் மத்திய இணை அமைச்சா் செஞ்சி இராமச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.

விழாவில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.விஜயகுமாா், மனித நேய மக்கள் கட்சி சையத்உஸ்மான், கரும்பு விவசாயிகள் சங்கம் டி.ஆா்.குண்டுரெட்டியாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.