/

மீண்டும் தமிழக முதல்வராவாா் மு.க.ஸ்டாலின்: கே.பாலகிருஷ்ணன்

தமிழக முதல்வராக மீண்டும் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பாா் என்று மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்களித்த மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 6:09 am IST

தமிழக முதல்வராக மீண்டும் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பாா் என்று மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் கே.பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவியும், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான பா.ஜான்சிராணி ஆகியோா் வாக்களித்தனா்.

பின்னா், கே.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றிபெறும்.

கடந்த ஒரு மாதகாலமாக வாக்காளா்களை சந்தித்தபோது, எப்போதும் இல்லாத வகையில் இந்தத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அலை வீசியதை பாா்க்க முடிந்தது. மீண்டும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.