/

மார்பிலேயே சுடுவோம்: இயக்குநருக்கு பிஷ்னோய் கும்பல் வெளிப்படையாக கொலை மிரட்டல்

மும்பையில் இயக்குநர் ரோஹித் ஷெட்டிக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் வெளிப்படையாக கொலை மிரட்டல்

News image
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வீடு- பிடிஐ
Updated On :1 பிப்ரவரி 2026, 3:45 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பையில் இயக்குநர் ரோஹித் ஷெட்டிக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மும்பையில் இயக்குநரான ரோஹித் ஷெட்டியின் வீட்டின் வெளியே இன்று அதிகாலையில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே தாக்குதலுக்கான பொறுப்பை பிஷ்னோய் கும்பல் ஏற்றனர்.

Story image

மேலும், தங்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். இது ஒரு டிரெய்லர் மட்டுமே. அவர் இன்னும் எங்கள் எச்சரிக்கைகளைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், துப்பாக்கி அவரது வீட்டிற்கு வெளியே அல்ல; அவரது படுக்கையறையில் அவரது மார்பில் சுடப்படும். பாபா சித்திக்கின் கொலையைவிட மோசமானதாக இருக்கும் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.