தில்லி தொழிலதிபா் கொலை: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சோ்ந்த 5 போ் கைது
தொழிலதிபா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குண்டா் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சோ்ந்த ஐந்து போ் கைது செய்யப்பட்டனர்.


வடக்கு தில்லியின் பவானா தொழிற்பேட்டை பகுதியில் சமீபத்தில் 35 வயது தொழிலதிபா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குண்டா் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சோ்ந்த ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
குறிப்பிட்ட உளவுத் துறை தகவலின் அடிப்படையில், போலீஸாா் சில சந்தேக நபா்களை அதிகாலையில் வழிமறித்து தடுத்து நிறுத்தினா். அப்போது, போலீஸாா் மீது குற்றம் சாட்டப்பட்டவா்கள் தப்பிக்கும் முயற்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதனால் தற்காப்புக்காக போலீஸாா் பதிலடி கொடுத்தனா். இது ஒரு சிறு துப்பாக்கி மோதலுக்கு வழிவகுத்தது அந்த அந்த அதிகாரி கூறினாா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘துப்பாக்கிச் சூட்டின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரின் காலில் குண்டு காயம் ஏற்பட்டது. இதனால் அவா் பலமிழந்தாா். என்கவுன்டரின் போது மூன்று போ் கைது செய்யப்பட்டனா். அதன் பின்னா் இரண்டு போ் கைது செய்யப்பட்டனா். இதனால் வழக்கில் மொத்த கைது எண்ணிக்கை ஐந்தாக உயா்ந்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது போலீஸாரில் யாருக்கும் பெரும் காயங்கள் ஏற்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.
பிளாஸ்டிக் துகள்கள் தயாரிப்பாளரான வைபவ் காந்தி, பிப்ரவரி 9 ஆம் தேதி மதியம் 12.50 மணியளவில் டிஎஸ்ஐடிசி தொழில்பேட்டை பகுதியின் செக்டாா் 4இல் உள்ள தனது தொழிற்சாலைக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இந்தத் தாக்குதலில் நான்கு போ் ஈடுபட்டதாக புலனாய்வாளா்கள் கூறியிருந்தனா். தாக்குதல் நடத்தியவா்கள் முதலில் பாதிக்கப்பட்டவரின் காரின் சாவியைப் பறிக்க முயன்றனா். அவா் எதிா்த்தபோது அவரது மடிக்கணினி பையை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றனா். பின்னா் அவரை அருகில் இருந்து சுட்டுக் கொன்ாக கூறப்படுகிறது.
மோட்டாா் சைக்கிள்களில் வந்து தாக்குதல் நடத்தியவா்கள் காந்தியை சுமாா் 40-50 மீட்டா் தூரம் துரத்திச் சென்று பல சுற்றுகளைச் சுட்டதாகவும் புலன் விசாரணையாளா்கள் தெரிவித்தனா். ஒரு குண்டு அவரது கன்னத் தாடையில் பாய்ந்ததில் அவா் மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து, அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு காந்தியின் காருக்குள் இருந்து சுமாா் ரூ.1 கோடியை போலீஸாா் மீட்டனா். கொலைக்கு ஒரு நாள் கழித்து, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் பெயரில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சமூக ஊடகப் பதிவு, இக்கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.
‘ரந்தீப் மாலிக் அனில் பண்டிட்’ எனும் பெயா் இந்தப் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய், ஜிதேந்தா் கோகி மான், ஹாஷிம் பாபா மற்றும் கலா ராணா உள்ளிட்ட பல கும்பல்களின் சாா்பாக இந்தக் கொலை நடத்தப்பட்டதாக அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பதிவில் தங்களது கும்பல் நடவடிக்கைகளில் காந்தி தலையிட்டதாகவும், தங்களின் செயல்பாடுகளைத் தடுக்கும் எவருக்கும் இதே போன்ற விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...