தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதி

திருச்சூர் வெடிவிபத்து தொடர்பாக, பட்டாசுகளின் வடிவமைப்பில் மாற்றம் ஏற்படுத்த முன்னாள் நீதிபதி ராமச்சந்திரன் நாயர் பரிந்துரை

News image

திருச்சூர் வெடி விபத்து - PTI

Updated On :22 ஏப்ரல் 2026, 2:31 pm

கேரளத்தில் வெடிவிபத்து தொடர்பாக, பட்டாசுகளின் வடிவமைப்பில் மாற்றம் ஏற்படுத்த முன்னாள் நீதிபதி ராமச்சந்திரன் நாயர் பரிந்துரைத்துள்ளார்.

கேரளத்தில் ஏப்ரல் 26-ல் நடைபெறவுள்ள பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழாவுக்காக பாதுகாக்கப்பட்டு வந்த பட்டாசுகள் கடும் கோடை வெய்யிலில் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, வெடி விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.என். ராமச்சந்திரன் நாயர் தலைமையில் தனிநபர் ஆணையம் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது.

இந்த நிலையில், வெடிவிபத்து தொடர்பாக செய்தியாளர்களுடன் சி.என். ராமச்சந்திரன் நாயர் பேசுகையில், "திருச்சூர் பட்டாசு வெடிப்பில் பலர் இறந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறோம்.

திருச்சூர் வெடி விபத்து

திருச்சூர் வெடி விபத்து - PTI

எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவு மீண்டும் நிகழாமலிருப்பதை உறுதிசெய்வதே ஆணையத்தை அமைப்பதன் அரசின் நோக்கம்.

கோயில் திருவிழாக்களில் பட்டாசுகளும் முக்கிய பங்களிக்கின்றன. அவை உலகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

சீனாவில் அதிக சத்தம் அல்லது வெடிப்புகளைக் கொண்ட பட்டாசுகளைவிட காட்சிக்கான பட்டாசுகளிலேயே (வாண வேடிக்கை பட்டாசுகளைப்போல) கவனம் செலுத்துகின்றனர்.

அவர்களைப்போல, நாமும் பட்டாசுகளின் வடிவமைப்பை மாற்றியமைக்க முடியும். நாங்கள் இதை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவோம்.

இந்த ஆணையம், பட்டாசுகள் மீது தடையைப் பரிந்துரைக்கும் நோக்கம் கொண்டதல்ல. அவற்றைத் தடை செய்வது அல்லது முற்றிலுமாக நிறுத்துவது என்பது பொருத்தமானதாக இருக்காது" என்று தெரிவித்தார்.

Summary

Thrissur blast: Commission may recommend changes in fireworks pattern; not ban, says Former Keralam HC judge Justice C N Ramachandran Nair

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.