மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பயங்கரவாதி பிரதமர் மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!

பிரதமர் மோடியை பயங்கரவாதி எனக் குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் கெடு

News image

மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 1:49 pm

பிரதமர் நரேந்திர மோடியை பயங்கரவாதி எனக் குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சென்னைக்கு வருகைதந்த காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, செய்தியாளர்களுடன் பேசுகையில், "அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு, அவர்கள் (அதிமுக) எப்படி பிரதமர் மோடியுடன் கைகோக்க முடியும்?

அவர் ஒரு பயங்கரவாதி. அவர் சமத்துவம் மற்றும் நீதியை நம்புவதில்லை. அவரது கட்சியும் சமத்துவத்தை நம்புவதில்லை. அவர்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறார்கள்.

அவர்கள் பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர், கருணாநிதி போன்ற திராவிட தலைவர்களின் கொள்கையை பலவீனப்படுத்துகிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடியை பயங்கரவாதி என கார்கே பேசியது, பாஜக தலைவர்களிடையே பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து, தனது கருத்து சர்ச்சையாகிய நிலையில், "மோடி எப்போதும் மிரட்டுகிறார் என்பதையே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்றவை அவரின் கைகளில் உள்ளன.

அவற்றை வைத்துக்கொண்டு, மக்களையும் அரசியல் கட்சிகளையும் அவர் அச்சுறுத்துவதாகக் கூறினேன்.

ஆனால், நான் கூறியவற்றை பாஜக திரித்து, பரப்பி வருகிறது" என்று கார்கே விளக்கமும் அளித்தார்.

இந்த நிலையில், பிரதமரை பயங்கரவாதி எனக் கூறியதற்கு 24 மணிநேரத்துக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.

Summary

EC issues notice to Congress Chief Mallikarjun Kharge over terrorist remark, seeks reply within 24 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.