திருச்சூர் வெடிவிபத்தில் சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதால், பலி எண்ணிக்கை உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளத்தில் ஏப்ரல் 26-ல் நடைபெறவுள்ள பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழாவுக்காக பாதுகாக்கப்பட்டு வந்த பட்டாசுகள் கடும் கோடை வெய்யிலில் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர். சம்பவத்தின்போது, அங்கு 38 பேர் இருந்திருக்கலாம் என விசாரணையில் தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, வெடிவிபத்துக்கு மத்தியில் 4 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவ இடத்தில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்த சோதனையின்போது மேலும் சில உடல் பாகங்கள் இருப்பதை மோப்ப நாய்கள் கண்டறிந்தன.
சம்பவ இடத்தில் 125 அதிகாரிகள் மற்றும் 5 நாய்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மேலும் 5 உடல் பாகங்கள் கண்டறியப்பட்டன.
இதுவரை, சுமார் 132 உடல் பாகங்கள் மீட்கப்பட்டு, திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு, அங்கு டி.என்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
மீட்கப்பட்ட உடல்களில் இருந்து டிஎன்ஏ மாதிரிகளை பிரித்தெடுக்கவும், காணாமல் போனவர்களின் உறவினர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் அவற்றை பொருத்தும் பணியிலும் நிபுணர்களின் குழு ஈடுபட்டுள்ளது.
Summary
More body parts recovered in Thrissur fireworks blast; search continues
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து: 13 பேர் பலி; 40 பேர் படுகாயம்

பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: 5 பேர் பலி
தில்லி கார் குண்டு வெடிப்பு: விசாரணைக்கு மேலும் 45 நாள் அவகாசம் நீட்டிப்பு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


