திருச்சூர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:
திருச்சூரில் உள்ள பட்டாசுத் தயாரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் பல உயிர்கள் பலியான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
கேரளத்தில் பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழா ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முண்டத்திகோடு பகுதியில் உள்ள திருவம்பாடி கோயிலுக்காக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.
ஓலை கொட்டகை அமைத்து பாதுகாக்கப்பட்டு வந்த பட்டாசுகள் கடும் கோடை வெய்யிலில் திடீரென வெடித்து விபத்து நேர்ந்துள்ளதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன. பட்டாசு தயாரிக்கும் பணியில், 70 தொழிலாளர்கள் வரை ஈடுபட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் கந்தனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்த விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Summary
Thrissur Firecracker Accident: ₹2 Lakh Compensation for Families of Victims
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் நீதிமன்றத்தில் சரண்
விருதுநகர் பட்டாசு ஆலை பலி எண்ணிக்கை 21-ஆக உயர்வு: முதல்வர் இரங்கல்
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்

புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



