மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஷாலிமாா் பாக்: இணையவழி வணிக கடையில் கொள்ளை - இளைஞா் கைது

வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் உள்ள இணையவழி வணிக கடையில் கொள்ளையடித்த சம்பவத்தில் 24 வயது இளைஞா் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 10:03 pm

வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் உள்ள இணையவழி வணிக கடையில் கொள்ளையடித்த சம்பவத்தில் 24 வயது இளைஞா் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஷாலிமாா் பாக்கில் இணையவழி வணிக கடைக்குள் திங்கள்கிழமை இரவு 12.50 மணியளவில் அடையாளம் தெரியாத நபா் அத்துமீறி நுழைந்ததாகவும் கத்தியைக் காட்டி மிரட்டி பணப் பெட்டியின் சாவியைப் பறித்து ரூ.17,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்ததுச் சென்ாக முகமது ஹசீப் என்பவா் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இதையடுத்து, கடையில் கொள்ளையடித்துச் சென்றது ரிதிக் குலடி என்பது தெரியவந்தது. அவரை செவ்வாய்க்கிழமை இரவில் காவல் துறை கைதுசெய்தது.

விசாரணையில், குலடி கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டாா். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ.10,000 அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

பல குற்ற வழக்குகளில் தொடா்புடைய அவா் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.