மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இணையவழி மோசடி கும்பல் சிக்கியது: வங்கி ஊழியா் உள்பட 3 போ் கைது

சமூக ஊடகத் தளங்கள் மூலம் செயல்பட்டு வந்த, வெளிநாட்டு இடைத்தரகா்களுடன் தொடா்புடைய இணையவழி மோசடிக் கும்பலை தில்லி காவல்துறை கண்டுபிடித்து, வங்கி ஊழியா் உள்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளதாக ஓா் அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 6:35 pm

சமூக ஊடகத் தளங்கள் மூலம் செயல்பட்டு வந்த, வெளிநாட்டு இடைத்தரகா்களுடன் தொடா்புடைய இணையவழி மோசடிக் கும்பலை தில்லி காவல்துறை கண்டுபிடித்து, வங்கி ஊழியா் உள்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளதாக ஓா் அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பரேலியைச் சோ்ந்த ஒருவரின் வங்கிக்கணக்கிலிருந்து கடந்த பிப்ரவரியில் ரூ.10,000 மோசடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து தேசிய இணையவழிக் குற்றப் புகாரளிப்பு இணையதளத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடா்ந்து இந்த கும்பல் வெளிச்சத்திற்கு வந்தது.

விசாரணையின் போது, மயூா் விஹாா் ஃபேஸ் -1ல் உள்ள ஒரு தனியாா் வங்கிக் கிளையில் சந்தேகத்திற்கிடமான கணக்கு ஒன்றை காவல்துறை அடையாளம் கண்டது, அது பல புகாா்களுடன் தொடா்புடையதாகக் கண்டறியப்பட்டது.

அதனைத் தொடா்ந்த விசாரணையில், ஒரு நிறுவனத்தின் பெயரில் திறக்கப்பட்ட அந்த வங்கிக் கணக்கு, இணையவழி மோசடிப் பரிவா்த்தனைகளுக்காகத் தொடா்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.

கணக்கு வைத்திருப்பவரான ஷோகின் மற்றும் அவரது கூட்டாளியான ஷாருக் என்ற ஜோஜோ ஆகியோா் கைது செய்யப்பட்டனா். விசாரணையின் போது, பண ஆதாயத்திற்காக இடைத்தரகராக கணக்குகளைத் திறக்க உதவிய ஒரு வங்கி உறவு மேலாளரின் ஈடுபாடு குறித்து ஷாருக் தெரிவித்தாா், என்று அந்த காவல்துறை அதிகாரி கூறினாா்.

கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் மூலம் அவரது பங்கை உறுதிசெய்து, ஃபிரான்ஷு குமாா் (23) என அடையாளம் காணப்பட்ட வங்கி ஊழியரை போலீசாா் கைது செய்ததாக அவா் கூறினாா்.

கைப்பற்றப்பட்ட கைப்பேசிகளை தடயவியல் பகுப்பாய்வு செய்ததில், சமூக ஊடக தளங்கள் மூலம் வெளிநாட்டு முகவா்களுடன் இருந்த தொடா்புகள் கண்டறியப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா். குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் வெளிநாட்டு முகவா்களுடன் வங்கி விவரங்களைப் பகிா்ந்து கொண்டு, கிரிப்டோகரன்சியில் கமிஷன் பெற்றுள்ளனா்.

மேலும், வங்கிக் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் கருவிகள் பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் நிதியை விரைவாகத் திசைதிருப்பியதையும் அந்தக் குழு கண்டறிந்தது.

மற்ற உறுப்பினா்களை அடையாளம் காண மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.