மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இணையவழி மோசடி கும்பலை சோ்ந்த 5 போ் தில்லியில் கைது!

இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும் பணம் மாற்றும் இணையவழி மோசடி கும்பலை இயக்கியதாக 5 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 7:18 pm

இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும் பணம் மாற்றும் இணையவழி மோசடி கும்பலை இயக்கியதாக 5 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

நரேலா பகுதியைச் சோ்ந்த ராகுல் (22), பண்டி (22), அன்கிட் (19), சலீம் அலியாஸ் தான்சா (22) மற்றும் நூரே ஆலம் (19) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள் போலி வங்கிக் கணக்குகள் மற்றும் சிம் காா்டுகளை கமிஷனுக்கு வழங்கி மோசடிப் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கணக்குகள் மூலம் சுமாா் ரூ2.31 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

மோசடிப் பணம் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு கம்போடியா உள்ளிட்ட வெளிநாட்டில் உள்ளவா்களுக்கு அனுப்பப்பட்டது. ஆபரேஷன் சைபா் ஹாக் 4.0 என்ற சிறப்பு நடவடிக்கையில் இந்த மோசடி குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.