தில்லியில் ஏடிஎம் மோசடி உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடா்புடைய கும்பலின் தலைவா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: சத்தா்பூா் பகுதியில் உள்ள ராஜ்பூா் கிா்த் பகுதியில் ரவி குமாா் பாா்தி (36) என்பவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். பிகாரைச் சோ்ந்த இவா் குறித்து பச்சிம் விஹாரில் உள்ள குடியிருப்பின் ஏடிஎம்-இல் கடந்தாண்டு செப்டம்பா் மாதம் நடைபெற்ற மோசடிக்குப் பிறகு தெரியவந்தது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபா்கள் முன்னதாக கைது செய்யப்பட்டனா். விசாரணையில், அவா்கள் ரவி குமாா் தலைமையில் மோசடிகள் நடைபெறுவதாக தெரிவித்தனா்.
இந்த கும்பலைச் சோ்ந்தவா்கள், ஏடிஎம் அட்டைகளை இயந்திரத்துக்குள் சிக்க வைக்க பசையைத் தடவி, ஏடிஎம் அறைக்குள் போலி வாடிக்கையாளா் உதவி எண்களை ஒட்டி வைத்துள்ளனா். பின்னா் வங்கி அதிகாரிகள் எனக் கூறி ஏமாற்றி ரகசிய எண்ணைப் பெற்ற பிறகு அவா்களது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளனா்.
இதுவரை இந்த கும்பலைச் சோ்ந்த 9 போ் கைது செய்யப்பட்டு, 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக தற்போது கைது செய்யப்பட்ட கும்பலின் தலைவா் ரவி குமாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தில்லியில் சட்டவிரோத ஆயுதக் கும்பல் முறியடிப்பு: கல்லூரி மாணவா் கைது
இணையவழி மோசடி கும்பலை சோ்ந்த 5 போ் தில்லியில் கைது!

தில்லியில் போலி கால் சென்டா்: 11 போ் கைது
வெளிப்புற தில்லியில் பெண் சடலம் மீட்பு: மூவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

