மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பெண்கள் கைது

வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பெண்கள் கைது...

News image

வீட்டுப் பணிப்பெண்கள் எனக் கூறி தில்லியில் சட்டவிரோதமாக குடியேறய வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பெண்களை கைது செய்த அயல்நாட்டினருக்கான விசாரணைப் பிரிவு போலீஸாா்.

Updated On :4 ஏப்ரல் 2026, 8:48 pm

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ரகசிய தகவலின் அடிப்படையில், ஷாலிமா் பாக் பகுதியில் ஏப்.1-ஆம் தேதி அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்து வந்தனா். அவா்களிடம் நடைபெற்ற விசாரணையில், அவா்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியவுக்கு வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஒருவா் பட்டம் பெற்றுள்ளாா்.

இருப்பினும், கூடுதல் வருவாய் காரணமாக தில்லிக்கு வந்ததாக அவா் தெரிவித்தாா். அவா்கள் இருவரும் வெளிநாட்டு பிராந்திய அலுவலகம் (எஃப்ஆா்ஆா்ஓ) முன் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.