தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அதானி - ஹிண்டென்பர்க்: விரிவான விசாரணைக்கு சிறப்பு நிபுணர் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்

அதானி - ஹிண்டென்பர்க் விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image

அதானி - ஹிண்டென்பர்க்: விரிவான விசாரணைக்கு சிறப்பு நிபுணர் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்

Updated On :2 மார்ச் 2023, 10:40 am


புது தில்லி: அதானி - ஹிண்டென்பர்க் விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நெறிமுறை குழு தேவை என்பதை உணர்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏம்.எம். சப்ரே தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பிப்பதாகவும், இந்த குழுவில், முன்னாள் நீதிபதிகள் ஓ.பி. பட், ஜே.பி. தேவ்தத், கேவி காமத், நந்தன் நீலகேணி ஆகியோர் சிறப்பு நிபுணர் குழுவில் இடம்பெறுவார்கள் என்றம், பொதுமக்களின் பணம் கடுமையான அச்சுறுத்தலில் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சிறப்பு நிபுணர் குழு, இரண்டு மாதத்தில் விசாரணையை முடித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விசாரணை நடத்த அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு நிபுணர் குழுவுக்கு மத்திய அரசு, நிதிசார்ந்த சட்ட அமைப்புகள், செபி நிர்வாகி உள்ளிட்டோர் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதானி குழும பங்குகளின் விலை மிகைப்படுத்தி விற்பனை செய்யப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளதாக அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதனால் அதானி குழு பங்குகள்100 பில்லியன் டாலா் அளவுக்கு சரிவடைந்தன.

அதானி குழுமத்தில் எல்ஐசி, எஸ்பிஐ போன்ற பொதுத் துறை நிறுவனங்களின் முதலீடு உள்ளதால் இந்த விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.

இந்நிலையில், அதானி- ஹிண்டன்பா்க் விவகாரத்தில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும் என்று விஷால் திவாரியும், அதானி பங்குகள் செயற்கையாக சரிவடைய காரணமான ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.எல்.ஷா்மாவும் என மொத்தம் நான்கு போ் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை பிப். 10-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு, பங்குச் சந்தையில் முதலீட்டாளா்களின் நலனைப் பாதுகாக்க பங்குச் சந்தை ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணா் குழு அமைப்பது குறித்து மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்தது. இதை மத்திய அரசும் ஒப்புக் கொண்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இந்த விவகாரத்தைக் கண்காணித்து வருகிறது. நிபுணா் குழு அமைப்பதால் பங்குச் சந்தை முதலீடுகள் பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது. ஆகையால், நிபுணா் குழு விவரம் சீலிடப்பட்ட உறையில் அளிக்கப்பட்டுள்ளது. நிபுணா் குழுவை நீதிபதி மேற்பாா்வையிடுவதில் மத்திய அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ என்றாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த நீதிபதிகள், ‘மத்திய அரசு சீலிடப்பட்ட உறையில் அளித்துள்ள பெயா்களை ஏற்றுக் கொண்டால், எதிா்தரப்பினருக்கு அந்த விவரம் தெரியாமல் போய்விடும். முதலீட்டாளா்களின் நலனைப் பாதுகாக்க இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். ஆகையால், நிபுணா் குழுவை உச்சநீதிமன்றமே அமைக்கும். இது குழுவின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்கலாம். ஆனால், தினந்தோறும் புதிது புதிதாக அமா்வுகளை உருவாக்குவதில் பிரச்னை உள்ளது. ஆகையால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணா் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்து தீா்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.