புதுதில்லி: புதுதில்லியில் ‘இந்தியா’ கூட்டணியின் நான்காவது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் இணைந்து அமைந்துள்ள இந்தியா கூட்டணி தலைவா்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்று வருகின்றது.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்த பிறகு முதல்முறையாக இந்தக் கூட்டணியின் கூட்டம் நடைபெறுகின்றது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறும் கூட்டத்தில், தொகுதி பங்கீடு, பாஜகவை வீழ்த்த புதிய தேர்தல் வியூகங்களை வகுக்கவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனை(உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
முன்னதாக, பாட்னா, பெங்களூரு மற்றும் மும்பையில் மூன்று முறை எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!
வீடியோக்கள்

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
தினமணி வீடியோ செய்தி...

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

