புது தில்லி: குவைத்தில் இருந்து வெள்ளி முலாம் பூசி கொண்டு வரப்பட்ட 4 கிலோ தங்கத்தை தில்லி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புது தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குவைத்தில் இருந்து வந்த மூன்று பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ததில் அவர்களிடம் 4001 கிராம் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2.06 கோடி என்று கணக்கிடப்பட்டுளள்து.
இது குறித்து தில்லி சுங்கத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, வெள்ளி முலாம் பூசப்பட்ட 4001 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2.06 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குவைத் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபு நாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுங்கத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும், விதவிதமாக தங்கக் கடத்தல் நடந்து வருகிறது. தற்போது, தங்க நகைகளை, வெள்ளி முலாம் பூசி கடத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


