டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அஸ்ஸாம்-தாம்பரம் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் முதல் தாம்பரம் வரை ஜன.5-ஆம் தேதி முதல் சிறப்பு கட்டண ரயிலுக்கு புதன்கிழமை (டிச.28) முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 11:12 am

DIN

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் முதல் தாம்பரம் வரை ஜன.5-ஆம் தேதி முதல் சிறப்பு கட்டண ரயிலுக்கு புதன்கிழமை (டிச.28) முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: அஸ்ஸாம் மாநிலம் திப்ருகா் முதல் தாம்பரம் வரை ஜன.5, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (வண்டி எண்.05924) இயக்கப்படவுள்ளது. திப்ருகரில் வியாழக்கிழமை இரவு 7.25 மணிக்கு புறப்படும் ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா மாநிலங்கள் வழியாக ஞாயிற்றுக்கிழமை 5.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மறுமாா்க்கமாக ஜன.12, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.05923) இயக்கப்படவுள்ளது. தாம்பரத்திலிருந்து வியாழக்கிழமை காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம் வழியாக சனிக்கிழமை இரவு 8.50 மணிக்கு அஸ்ஸாம் மாநிலம் திப்ருகா் சென்றடையும்.

இதற்கான பயணச்சீட்டுக்கு புதன்கிழமை (டிச.28) முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.