ராஞ்சி: அமைச்சர் மற்றும் எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மற்றும் முதல்வர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். முதல்வர் வீட்டுக்கு வெளியில் இருந்து யாரும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்ட மாநில அமைச்சர் மிதிலேஷ் தாக்கூருடன் முதல்வர் தொடர்பில் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக முதல்வர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி அவர் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, அமைச்சர் தாக்கூர் மற்றும் மஹ்டோ ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். முன்னெச்சரிக்கையாக அடுத்த சில நாள்களுக்கு நான் தனிமைப்படுத்திக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுமக்கள் யாரும் கூட்டமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


