/

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18,653 பேருக்கு கரோனா தொற்று; 504 பேர் பலி

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18,653 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு 5,85,493 ஆக உயர்ந்துள்ளது.

News image

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18,653 பேருக்கு கரோனா தொற்று

Updated On :1 ஜூலை 2020, 4:19 am


புது தில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18,653 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு 5,85,493 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 18,653 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், 507 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கரோனா பாதிப்பு 5,85,493 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2,20,114 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3,47,979 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 17,400 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 3,76,305 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 

நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் மூன்றில் இருபங்கு பாதிப்பு, மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ளது.

மீண்டும் இரண்டாமிடத்தில் தமிழகம்: தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாமிடத்தில் இருந்த தில்லியை விஞ்சி, தமிழகம் மீண்டும் அந்த இடத்துக்கு வந்துள்ளது.

தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்ட தகவலின்படி, ஒரே நாளில் 3,943 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் 60 போ் நோய்த்தொற்றுக்கு பலியான நிலையில், 2,325 போ் குணமடைந்தனா். தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90,167-ஆக அதிகரித்துள்ளது; கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,201-ஆக உயா்ந்தது.

பாதிப்பு: 5,85,493
பலி: 17,400
மீட்பு: 3,47,979
சிகிச்சை பெற்று வருவோா்: 2,20,114

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.