/

நிலுவை ஊதியம்: குடியரசுத் தலைவருக்கு ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் கடிதம்

நிதிநிலை மோசமடைந்ததால் தற்காலிகமாக சேவையை நிறுத்தி வைத்திருக்கும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

News image
Updated On :20 ஏப்ரல் 2019, 10:01 am


புது தில்லி: நிதிநிலை மோசமடைந்ததால் தற்காலிகமாக சேவையை நிறுத்தி வைத்திருக்கும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தர வேண்டிய ஊதிய நிலுவைத் தொகைகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்து, அவசர உதவிக்கு நிதியுதவி அளித்து, விமான சேவை மீண்டும் செயல்பட உதவி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

23 ஆயிரம் ஊழியர்களைக் கொண்ட ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் நிதிப்பற்றாக்குறையால் தவித்து வருகிறது. தனது நிறுவனத்தின் விமான ஓட்டிகள் உட்பட ஊழியர்களுக்கு ஊதியத்தையும் நிலுவையில் வைத்துள்ளது.

முழுதாக 3 மாதத்துக்கு மேல் ஊதியம் கிடைக்காமல் நிலுவையில் இருப்பதால், உடனடியாக மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் ஊழியர்களின் சங்கம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.