காசியாபாத்: இரண்டு வயது பெண் குழந்தை ஒன்றை தெரு நாய்க் கூட்டம் சேர்ந்து தின்று தீர்த்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள மோடிநகர் பகுதியில் கோவிந்த் நகர் என்றொரு இடம் உள்ளது. அங்குள்ள பீம் நகர் குடியிருப்பு பகுதியில் திங்கள் இரவு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தையை சூழ்ந்து கொண்ட தெரு நாய்கள் கூட்டம், அதைக் கடித்து அருகில் உள்ள கரும்பு வயல் ஒன்றுக்கு இழுத்துச் சென்றுள்ளது. அங்கு வைத்து குழந்தையை அனைத்து நாய்களும் சேர்ந்து தின்று தீர்த்துள்ளன.
பின்னர் சம்பவம் பற்றித் தகவல் அறிந்த பகுதிவாசிகள் ஒன்று கூடி. மோடிநகர் நகராட்சிக்கு எதிராக ஆத்திரத்துடன் கோஷங்கள் எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி பல நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், மோடி நகர் மண்டல துணை நீதிபதி பவன் அகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
‘டேட்டிங்’ செயலி மூலம் தொடா்புகொண்ட லாரி ஓட்டுநரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறிப்பு

மலா்க் கண்காட்சி: உதகை தாவரவியல் பூங்காவை தயாா் செய்யும் பணி தீவிரம்

தூத்துக்குடி ஹாக்கி யூனிட் ஆலோசனைக் கூட்டம்

திருப்புவனத்தில் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய பாலகிருஷ்ணப் பெருமாள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


