டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆதார் காரணமாக 5 கோடி 'பேய்' கணக்குகள் கண்டுபிடிப்பு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

ஆதார் எண் அவசியமாக்கப்பட்ட பின்னர் தான் 5 கோடி 'பேய்' கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:02 pm

Raghavendran

நாடு முழுவதும் போலி ரேஷன் இணைப்புகள் மற்றும் எரிவாயு இணைப்புகளை கண்டறியும் நோக்கத்தோடு அவற்றுடன் ஆதார் எண் இணைப்பது அவசியமாக்கப்பட்டது.

மேலும், வங்கிக் கணக்கு, மொமைல் நம்பர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு தனிநபர் அடையாளக் குறிப்புகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது.

இதையடுத்து, ஆதார் கட்டாயமாக்கப்பட்டதால் தங்களின் தனிநபர் அடையாளக் குறிப்புகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் தனிநபரின் அடையாளங்கள் திருடுபோக வாய்ப்புள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் இன்னும் பல்வேறு ஆதார் தொடர்பான நடவடிக்கைகள் மீது பலதரப்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. எனவே, ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க 5 பேர் கொண்ட பெஞ்ச் அமைத்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டது.

இதில், ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளும் இந்த 5 பேர் கொண்ட நீதிபதிகள் குழு டிசம்பர் மாதம் இறுதியில் விசாரிக்கவுள்ளது. 

இந்நிலையில், ஆதார் காரணமாக 5 கோடி 'பேய்' கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய நிலக்கரி மற்றும் ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஆதார் தொடர்பான அவசியம் குறித்து அவர் பேசிய விடியோ காட்சியை பதிவிட்டுள்ளார்.

அனைத்துக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டதால் நாடு முழுதிலும் மொத்தம் 3.5 கோடி போலி எரிவாயு இணைப்புகளும், 1.6 கோடி போலி ரேஷன் இணைப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.