சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன்

கலவர வழக்கு ஒன்றில் ஆஜராக தவறிவதற்காக கைது செய்யப்பட்ட தில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:39 am

PTI

கலவர வழக்கு ஒன்றில் ஆஜராக தவறிவதற்காக கைது செய்யப்பட்ட தில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தில்லியில் 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற கலவர வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாடல் டவுன் சட்டப்பேரவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அகிலேஷ் திரிபாதி நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அகிலேஷ் திரிபாதிக்கு இன்று ஜாமீன் வழங்கி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கபில் குமார், ஜாமீன் வழங்கினார்.

முன்னதாக, இதே வழக்கில் ஜாமீன் பெற்றிருந்த திரிபாதி, தனக்கு வழங்கப்பட்ட சலுகைகளை முறைகேடாகப் பயன்படுத்தி, கோர்ட்டில் ஆஜாராகமல் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு ஜாமீனில் வர முடியாத பிடி ஆணை பிறப்பித்து நீதிபதி கபில் குமார் உத்தரவிட்டார். பின்னர் போலீஸார் திரிபாதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு சிறை சென்ற 5-ஆவது எம்எல்ஏ அகிலேஷ் திரிபாதி ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.