15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மகா சண்டி யாக பந்தலில் தீ விபத்து

சந்திரசேகர ராவின் பண்ணை வீட்டில் நடைபெற்று வரும் மகா சண்டி யாகத்தின் போது ஒரு பந்தலில் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :27 டிசம்பர் 2015, 10:36 am

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பண்ணை வீட்டில் நடைபெற்று வரும் மகா சண்டி யாகத்தின் போது ஒரு பந்தலில் தீ விபத்து ஏற்பட்டது. எனினும், இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீஸார் கூறினர்.

ஹைதராபாதை அடுத்துள்ள மேடக் மாவட்டம், எர்ரவள்ளி கிராமத்தில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்குச் சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அங்கு, உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் மகா சண்டி யாகம் கடந்த புதன்கிழமை (23ஆம் தேதி) தொடங்கி ஐந்து நாள்களுக்கு நடைபெற்று வருகிறது.

தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், தமிழகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் இந்த யாகத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் யாகத்தின் இறுதி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.30 மணியளவில் யாகம் நடைபெறும் பந்தலின் ஒரு பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

ஒமகுண்டத்திலிருந்து பரவிய தீ, யாகம் நடைபெற்ற பந்தலுக்குப் பரவியது. மூன்று தீயணைப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்தையடுத்து பந்தலில் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். எவருக்கும் காயமேற்படவில்லை. யாகம் நடைபெற்ற பந்தலின் ஒரு பகுதி சேதமடைந்தது என மேடாக் வட்டத்தின் டி.எஸ்.பி. ஜி.ராஜ் ரத்னம் கூறினார்.

இந்த தீவிபத்து காரணமாக, இன்று யாகத்தில் பங்கேற்பதாக இருந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.