15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தில்லி விமான விபத்து: பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 10 பேர் பலி, சம்பவ இடத்துக்கு விரைந்தார் ராஜ்நாத் சிங்

தில்லியின் துவாரகா பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2015, 7:23 am

தில்லியின் துவாரகா பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விமானத்தில் இந்திய வீரர்கள் சுமார் 10 பேர் பயணம் செய்தனர். தில்லியில் இருந்து ராஞ்சி நோக்கி புறப்பட்ட விமானம், துவாரகாவில் உள்ள பத்போலா என்ற கிராமத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இதனையடுத்து 15 வண்டிகளில் தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு  விரைந்தனர்.

தனியாருக்கு சொந்தமானதாக கூறப்படும் இந்த விமானம் விபத்திற்குள்ளானதில் 3 இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், 7 தொழில்நுட்ப வல்லுநர்கள் என 10 பேரும் உயிரிழந்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.

விமான விபத்து நடந்த இடத்துக்கு, எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சம்பவ இடத்துக்கு பார்வையிட விரைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.