திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாத உதவித்தொகையுடன் சாப்ட்வேர் தொழிற்நுட்ப பூங்காவில் அப்ரண்டிஸ்!

புது தில்லியில் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவில் ஒரு ஆண்டிற்கான தொழிற்பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

News image

இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவில் அப்ரண்டிஸ் - எஸ்டிபிஐ

Updated On :9 மே 2026, 7:30 am IST

இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள்(எஸ்டிபிஐ), எஸ்டிபி, இஎச்டிபி திட்டத்தின் கீழ் ஏற்றுமதியாளர்களுக்குச் சட்டரீதியான சேவைகளை வழங்குவதோடு, அதிவேக இணையம் மற்றும் ஐபிஎல்சி இணைப்புகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் விரிவுபடுத்துகிறது. எஸ்டிபிஐ தற்போது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 71 மையங்களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புது தில்லியில் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவில் ஒரு ஆண்டிற்கான தொழிற்பயிற்சிப் பணியாளர் பதவிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விபரம் வருமாறு:

வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு எண்.: 7(1)/1/STPI-HQ/2026-27

பயிற்சியின் பெயர்: Graduate Apprentice

காலியிடங்கள் : 8

தகுதி: பொறியியல் துறையில் ஐடி, இஇஇ, இசிஇ, சிஎஸ்இ போன்ற ஏதாவதொரு பிரிவில் பி.இ. அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். பொறியியல் இல்லாத பிரிவுக்கு ஏதாவதொரு துறையில் பி.இ., பி.காம் போன்ற ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 15,000; கலை, அறிவியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.12,300 வழங்கப்படும்.

பயிற்சியின் பெயர்: Technician Apprentice

காலியிடங்கள் : 7

உதவித்தொகை: மாதம் ரூ.10,900

தகுதி: பொறியியல் துறையில் ஐடி, இஇஇ, இசிஇ, சிஎஸ்இ போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : மேற்கண்ட அனைத்துப் பயிற்சிகளுக்கும் 11.5.2026 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், 27 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: சம்பந்தப்பட்ட படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். ஏப்ரல் 2021-ஆம் ஆண்டிற்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு பின்னர் www.stpi.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.5.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Applications are invited from eligible candidates for the position of Apprentice Trainee...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.