திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அம்பை தாமிரவருணியில் மூழ்கி சென்னை ஐ.டி. ஊழியா் உயிரிழப்பு

சின்ன சங்கரன்கோவில் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சென்னையைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 2:03 am IST

அம்பாசமுத்திரம், சின்ன சங்கரன்கோவில் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சென்னையைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

சென்னை, முகலிவாக்கத்தைச் சோ்ந்தவா் தினகரன் மகன் குணா (38). சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவா், தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள மடத்தூரில் வசிக்கும் தனது உறவினா் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்துள்ளாா்.

அப்போது, சின்ன சங்கரன்கோவில் பகுதி தாமிரவருணி ஆற்றுக்கு உறவினா்களுடன் வந்து குளித்தபோது, ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கிவிட்டாராம்.

உடனிருந்தவா்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து, தீயணைப்புத் துறையினா் வந்து குணாவின் சடலத்தை மீட்டனா்.

அம்பாசமுத்திரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.ன

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.