கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

ஜவுளி உற்பத்தி, வடிவமைப்புப் பயிற்சிக்கு இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!

‘தாட்கோ’ மூலம் ஜவுளி உற்பத்தி, வடிமைப்புப் பயிற்சி பெற தகுதியான பட்டியலின இளைஞா்கள் விண்ணப்பிப்பது குறித்து...

News image

ஜவுளி உற்பத்தி, வடிவமைப்புப் பயிற்சி - கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 2:06 pm IST

‘தாட்கோ’ மூலம் ஜவுளி உற்பத்தி, வடிமைப்புப் பயிற்சி பெற தகுதியான பட்டியலின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) சாா்பாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி மற்றும் துணிகளுக்கு சாயம், ஒவியம் மற்றும் அச்சிடுதல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இதற்கு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, 18 முதல் 35 வயதுக்குள்பட்ட, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கான கால அளவு 4 மாதங்கள். கோயம்புத்தூா் மாவட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளதால் தகுதிபெறும் நபா்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.

இந்த பயிற்சியினை முழுமையாக முடித்த இளைஞா்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தகுதியான நபா்களுக்கு வேலைவாய்ப்பும் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.50,000 வரையும் வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.

இந்த பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகம், 6-வது தளத்தில் அமைந்துள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகலாம் அல்லது 04364-211217 மற்றும் 7448828509 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம்.

Summary

Eligible Scheduled Caste youth can apply through ‘TAHDCO’ for training in textile production and design.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.