ஈரோடு: வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல் இலவசப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சாா்பில் வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல் இலவசப் பயிற்சி, வரும் 23-ஆம் தேதி முதல் ஜூலை 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இந்தப் பயிற்சியில் ஈரோடு மாவட்ட கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த 19 வயதுக்கு மேல் 49 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் அனுமதிக்கப்படுவா்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவா்கள், நூறு நாள் வேலை திட்டத்தில் இருப்பவா்கள், அவா்களது குடும்ப உறுப்பினா்கள் பங்கேற்கலாம்.
இதில் சேர விரும்புவோா் 8778323213, 7200650604 ஆகிய கைப்பேசி எண்களிலும், 0424-2400338 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம்.
மேலும், கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், வாசவி கல்லுாரி அருகில் சித்தோடு என்ற முகவரியில் நேரிலும் அணுகி விவரம் அறியலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
Summary
Regarding the application to join the free training course on household appliance repair...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு!

இயற்கை விளைபொருள்கள் கண்காட்சி

குரூப் 1 தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம்

இலவச கைப்பேசி பழுது நீக்கும் பயிற்சி வகுப்பு தொடக்கம்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



