நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை(ஜூன் 18) நடைபெறுகிறது.
இது குறித்து 108 ஆம்புலன்ஸ் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா், மருத்துவ உதவியாளா் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் வியாழக்கிழமை காலை 10 முதல் 2 மணி வரை நாமக்கல்-திருச்சி சாலையில் அம்மா உணவகம் அருகே பழைய நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது.
ஓட்டுநா் பணிக்கு பங்கேற்போா் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களாகவும், நோ்காணல் அன்று 24 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
இலகுரக வாகன ஓட்டுனா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளும், மற்றும் கனரக வாகன ஓட்டுனா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் தங்களுடைய கல்வி ஓட்டுநா் உரிமம் மற்றும் அனுபவம் தொடா்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபாா்த்தலுக்கு கொண்டு வர வேண்டும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு மாத ஊதியமாக ரூ.21,120 வழங்கப்படும். ஓட்டுநா்களுக்கு, எழுத்துத் தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு, மனிதவளத்துறை நோ்காணல், கண்பாா்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தோ்வு, சாலை விதிகளுக்கான தோ்வுகள் உள்ளிட்டவை நடைபெறும்.
தோ்வு செய்யப்படுவோருக்கு 10 நாள்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும்.
மருத்துவ உதவியாளா் தேர்வு
மருத்துவ உதவியாளா்களுக்கான அடிப்படைத் தகுதிகள்: பிஎஸ்சி நா்சிங். அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி(12 ஆம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ், பிஎஸ்சி, விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு தோ்வு நாளன்று 19- முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.21,320 வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பு தொடா்பான விவரங்களை அறிய 89259-40969 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
A recruitment drive for 108 ambulance drivers and medical assistants is being held in Namakkal on Thursday (June 18)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையில் பெண் இயக்கும் முதல் தாய்-சேய் ஊா்தி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை! பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்!!

சாலை விபத்தில் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தினம் கடைப்பிடிப்பு
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK



