இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஊட்டியிலுள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் குரூப் 'சி' பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

News image

ஊட்டி வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் குரூப் 'சி' பணிகள் - dssc

Updated On :11 ஜூன் 2026, 1:41 pm IST

ஊட்டியிலுள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் குரூப் 'சி' பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Lower Division Clerk

காலியிடங்கள்: 9

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

தகுதி: +2 தேர்ச்சியுடன், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Civilian Motor Driver

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

தகுதி: +2 தேர்ச்சியுடன், சிவிலியன் ஓட்டுநர் உரிமம் மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff (Office & Training)

காலியிடங்கள்: 38

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Stenographer Grade-II

காலியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

தகுதி: +2 தேர்ச்சியுடன், 1 நிமிடத்தில் 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்தில் எழுதி 50 நிமிடத்தில் ஆங்கிலத்திலும், 65 நிமிடத்தில் இந்தியிலும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி்: Supervisor (Networking)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300

தகுதி : Computer Application, Computer Science, Information Technology ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Network Administrator

காலியிடங்கள்: 4

சம்பளம்: ரூ.29,200 - 92,300

தகுதி: +2 தேர்ச்சியுடன் Networking-இல் டிப்ளமோ, Computer Application இளங்கலை தேர்ச்சியுடன் Cisco Network Associate சான்றிதழ் மற்றும் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெ றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Hardware Administrator

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300

தகுதி: +2 தேர்ச்சியுடன் Computer Hardware-டிப்ளமோ தேர்ச்சி அல்லது Computer Application பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Lineman

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

தகுதி: +2 தேர்ச்சியுடன் Optical Fiber Cable Line Management-இல் டிப்ளமோ தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Boat Builder

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

தகுதி: +2 தேர்ச்சியுடன் Boat Building-இல் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .Marine Fitter-இல் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (TA) Printing Machine Operator

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

தகுதி: Printing Machine Operator பிரிவில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்தத் தேர்வு, திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை கனரா வங்கியில் மாற்றத்தக்க வகையில் 'DSSC Direct Recruit-ment - 2026' என்ற பெயருக்கு டி.டி. யாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.dssc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதில் கையொப்பமிட்டு தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து, டி.டி. இணைத்து, அதனுடன் சுய முகவரியிட்ட உறையுடன் ரூ.56-க்கான Stamp ஒட்டி கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி

The Commandant, Defence Services Staff College, Wellington, Nilgiris - 643 231, Tamil Nadu.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 12.6.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Wellington invites applications from eligible Indian citizens for the following Group ‘C’ Civilian posts...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.