இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

குடும்பத் தலைவிகள்தான் நாட்டை கட்டமைப்பவர்கள்; அவர்களது பணிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் மதிப்பு என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

News image

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - file photo

Updated On :11 ஜூன் 2026, 12:36 pm IST

குடும்பத் தலைவிகள்தான் நாட்டை கட்டமைப்பவர்கள்; அவர்களது பணிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் மதிப்பு என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

ஒவ்வொரு குடும்பங்களுக்குள்ளும் சமூகத்துக்குள்ளும் வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகள் மேற்கொள்ளும் பணியானது, இல்லத்தரசிகள் என்ற பொறுப்பில் இருப்பவர்கள் நாட்டைக் கட்டமைப்பவர்கள் என்ற அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.

சாலை விபத்துகளில் உயிரிழக்கும் இல்லத்தரசிகளுக்கான இழப்பீட்டைத் தீர்மானிக்கும்போது, ​ஊதியம் பெறாமல், ​அவர்கள் மேற்கொள்ளும் வீட்டு வேலைகளின் மதிப்பை மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.30,000 என கணக்கிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

மேலும், இல்லத்தரசிகள் "தேசத்தை உருவாக்குபவர்கள்" என அங்கீகரிக்கப்படத் தகுதியானவர்கள் என்றும் அது அறிவித்தது.

நாடு முழுவதும் வாகன விபத்து வழக்குகளில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை மாற்றியமைக்கக் கோரிய ஒரு வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, இல்லத்தரசிகளின் தோராயமான வருவாயை திறன்மிக்க தொழிலாளர்களின் ஊதியத்துடன் ஒப்பிட்டு உருவாக்கும் நீண்டகால நடைமுறையை நிராகரித்துவிட்டது.

இதுபோன்ற அணுகுமுறை, வீட்டுப் பராமரிப்புப் பணிகளின் உண்மையான பொருளாதார மற்றும் சமூக மதிப்பைப் பிரதிபலிக்கத் தவறிவிடுகிறது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், "நாங்கள் ஒரு புதிய வழிகாட்டு நெறிமுறையை உருவாக்கியுள்ளோம்; அதன்படி, பிரணாய் சேத்தி வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் கீழ் கிடைக்கக்கூடிய பிற இழப்பீடுகளுடன் கூடுதலாக, வீட்டுப் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட இல்லத்தரசிகளின் இழப்பிற்கான மதிப்பை மாதத்துக்கு குறைந்தபட்சம் 30,000 என நிர்ணயித்துள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்ற குடும்பத் தலைவி 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாலை விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பைப் பிறப்பித்துள்ளது. சாலை விபத்துக்கு இழப்பீடு கோரி, அப்பெண்ணின் கணவரும் மூன்று பிள்ளைகளும் சாலை விபத்து தீர்ப்பாயத்தை அணுகினர். பிறகு இவர்கள் உயர் நீதிமன்றங்களையும் நாடினர். ஆனால், விபத்து நடந்து 20 ஆண்டுகளுக்குப் பின், இந்த வழக்கு நீதிமன்றங்களில் முறைப்படி விசாரணைக்கு வந்தது.

இது குறித்து கவலை தெரிவித்திருக்கும் உச்ச நீதிமன்றம், சாலை விபத்து வழக்குகளில் ஓராண்டுக்குள் இழப்பீடு குறித்து முடிவெடுத்துஅறிவிக்க வேண்டும். அனைத்து நீதிமன்றங்களும் இதில் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். குடும்பத் தலைவர்களின் பணி மதிப்பு பொருளாதார ரீதியாக மதிப்பிடப்படாமல், அவர்கள் வேலை செய்யாத பணியாளர்களைப் போலவே கருதுகிறது.

இதுபோன்று சில வழக்குகளையும் விசாரித்த உச்ச நீதிமன்றம், இல்லத்தரசிகளுக்கு முறைப்படி ஊதியம் கொடுப்பதில்லை என்பதற்காக அவர்களது பணியை குறைத்து மதிப்பிடக்கூடாது, அவர்கள் குடும்பத்தில் செய்யும் வேலைக்கு மதிப்பிட முடியாத அளவுக்கு மதிப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது.

Summary

Homemakers are the ones who build the nation; the Supreme Court has observed that their work is worth ₹30,000 per month.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.