தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாலியல் தொழிலில் ஈடுபடுவோருக்கான அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்

பாலியல் தொழிலில் ஈடுபடுவோரின் அடிப்படை உரிமைகள் பற்றி உச்ச நீதிமன்றம்...

News image

உச்ச நீதிமன்றம் - ANI | கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 8:49 pm IST

புது தில்லி : பாலியல் தொழிலில் சுய விருப்பத்தின்பேரில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை என்று காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாலியல் தொழில் மூலம் பெண்களை கொடுமைப்படுத்துதல் செயல்களில் ஈடுபடும் குற்றங்களிலிருந்து மீட்கப்படும் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அல்லது ஆண்கள் ஆகியோரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் குறித்து வழிகாட்டுதல் வழங்கக் கோரிய மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே. பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் ஆய்வுக்கு திங்கள்கிழமை (ஜூன் 1) உட்படுத்தப்பட்டது.

பாலியல் தொழிலை வணிகமயமாக்குவதையும், பெண்களை மனித கடத்தல் செய்வதையும் தடுக்கும் சட்டம் (ITP Act (Immoral Traffic (Prevention) Act, 1956)) பற்றிய ஆய்வு மனுவில் நாட்டின் தலைமை நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாவது :

70 ஆண்டுகால பழமையான இந்தச் சட்டத்தில் உள்ள அம்சங்களில் பாலியல் தொழிலில் சுய விருப்பத்தின்பேரில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. பாலியல் நடவடிக்கை செய்வது மட்டுமே சட்டவிரோதம் அல்ல. அதனை வணிக பயன்பாட்டுக்காக மாற்றி பயன்படுத்துவது குற்றமாகும். ஆகவே, பாலியல் தொழில் குறித்து போலீஸார் சோதனை செய்து அப்போது சிக்கும் பாதிக்கப்பட்ட பெண்களை கைது செய்து விசாரணை செய்யலாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலியல் தொழிலாளிகளுக்கான மறுவாழ்வு குறித்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நீதிமன்றம், பாலியல் தொழிலாளிகளைத் துன்புறுத்டக் கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

மறுவாழ்வுக்கு அவர்களுக்கு விருப்பமில்லாதபட்சத்தில் அவர்களைக் கட்டாயப்படுத்தி அதில் ஈடுபடுத்தக் கூடாது. மறுவாழ்வு மையங்களுக்கு சென்று புது வாழ்க்கையை தொடங்குதல் உள்ளிட்ட விவகாரங்களில் பாலியல் தொழிலாளிகளின் விருப்பமே முதன்மையாக கருத்திற்கொள்ள வேண்டியதாகும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

Summary

The Supreme Court recently issued detailed guidelines for the rescue, protection and rehabilitation of victims of trafficking for commercial sexual exploitation, holding that such victims have a fundamental right to rehabilitation under Articles 21 and 23 of the Constitution [Prajwala Vs Union of India].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.