மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி பெற்ற அறிவியல் அமைப்பான 'தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் கவுன்சிலின்' (என்சிஎஸ்எம்) ஒரு அங்கமான பெங்களூருவில் உள்ள 'விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியக'த்தில், பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். : 02/2026
பணி: Education Assistant 'A'
காலியிடங்கள்: 4
தகுதி: Physics, Chemistry, Electronics, Computer Science, Mathematics, Astronomy, Geology and Statistics பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,200 -93,300
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Stenographer
காலியிடம் : 1
தகுதி: +2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Office Assistant
காலியிடங்கள்: 3
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 25-க்குள் இருக்கவேண்டும்.
பணி: Tech-nician 'A'
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: பத்தாம் வகு ப்பு தேர்ச்சியுடன் Fitter, Carpenter பிரிவில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Artist 'A'
காலியிடம் : 1
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Fine,Commercial Art-இல் டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு பெங்களூருவில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.885. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.vismuseum.gov.in/recruitment.php என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.6.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Visvesvaraya Industrial & Technological Museum (VITM) is a constituent unit of National Council of Science Museums (NCSM), an autonomous scientific organization functioning under Ministry of Culture...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










