எங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,600 குறைந்தது!உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து2025-ல் சமூக வலைதளங்கள் மூலம் ரூ. 1.89 லட்சம் கோடி மோசடி!உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டு
/

பொதுத்துறை நிறுவன மருத்துவமனையில் பாராமெடிக்கல் பணிகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

பொதுத்துறை நிறுவனமான வடக்கு நிலக்கரி வயல் நிறுவனத்தின் மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள 104 பாராமெடிக்கல் பணியிடங்கள் குறித்து...

News image

வடக்கு நிலக்கரி வயல் நிறுவனத்தின் மருத்துவமனைகளில் பாராமெடிக்கல் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு - என்சிஎல்

Updated On :29 ஏப்ரல் 2026, 6:41 am

பொதுத்துறை நிறுவனமான வடக்கு நிலக்கரி வயல் நிறுவனத்தின் மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள 104 பாராமெடிக்கல் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து மே 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: NCL/SING/HR/Direct Recruitment/2026-27/125

பணி: Staff Nurse

காலியிடங்கள்: 47

சம்பளம்: மாதம் ரூ.47,330

தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி அல்லது ஜிஎன்எம் முடித்து நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Pharmacist (Trainee)

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.47,330

தகுதி: அறிவியல்பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று டிப்ளமோ மருந்தாளுர்(டி.பார்ம்) முடித்து பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Technician Trainee (Pathology)

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.47,330

தகுதி: Pathology மருத்துவ பாடப்பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

பணி: Technician Trainee (Dental)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.47,330

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது Dental Technician படிப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Physiotherapist (Trainee)

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.47,330

தகுதி: Physiotheraphy பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

பணி: Technician (Optometry)

காலியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ. 43,775

தகுதி: Optometry,Radiography,ECG ஏதாவதொரு மருத்துவப் பாடப் பிரிவில் டிப்ளமோ, சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Overseer (Civil)

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ. 43,775

தகுதி: பொறியில் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கு 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, ஆங்கிலம், ரீசனிங் மற்றும் சம்மந்தப்பட்ட முக்கிய பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விவரங்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினரை தவிர, இதர அனைத்து பிரிவினர் ரூ.1,000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nclcil.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.5.2026

Summary

Northern Coalfields Limited (NCL) has officially released the NCL Recruitment 2026 Notification for Pharmedical Posts...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.