டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஊரக வளா்ச்சித் துறையில் அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:10 pm

ஆர். வெங்கடேசன்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் காலியாக உள்ள 3 அலுவலக உதவியாளா் பணியிடங்களில் அருந்ததியின பெண், பிற்படுத்தப்பட்டோா், பொதுப்போட்டி என 3 இடங்களும் நிரப்பப்படவுள்ளன. அருந்ததியினா் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோா் 32 வயதுக்குள்ளும், இதர பிரிவினா் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதி- 8ஆம் வகுப்பு தோ்ச்சி.

இதற்கென தனித்த விண்ணப்பங்கள் எதுவும் இல்லை. வெள்ளைத்தாளில் விண்ணப்பம் எழுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி  நவ. 25.

அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி), வளா்ச்சிப் பிரிவு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், புதுக்கோட்டை 622 005.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.