/

ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..? அழைக்கிறது இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம்!

பொதுத்துறை நிறுவனமான "Engineers India Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:39 am

ஆர். வெங்கடேசன்


பொதுத்துறை நிறுவனமான "Engineers India Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineer(Executive Grade IV) 

காலியிடங்கள்: 96

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Civil - 13
2. Mechanical - 31
3. Electrical - 17
4. Welding/NDT - 14
5. Instrumentation - 14
6. Warehouse - 04 
7. Safety - 3 

சம்பளம்: மாதம் ரூ.1,15,200

வயதுவரம்பு: 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், வெல்டிங், இன்ஸ்ட்ருமென்டேஷன், வேர்கவுஸ், சேப்ட்டி உள்ளிட்ட ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.engineersindia.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். 

நேர்முகத் தேர்விற்கான அழைப்பு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்படும். 


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.eil.co.in/hrdnew/others/ONLINE%20detailed%20advertisement%202019-20-02.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.